R.Tharaniya / 2025 மார்ச் 20 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் விளாங்குளி கிராமத்திலுள்ள வயலில் இருந்து உயிரிழந்த நிலையில் யானை ஒன்றை புதன்கிழமை (19) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த யானை 18 வயதுடையது என தெரிய வந்துள்ளது.
புதன்கிழமை(19) அப்பகுதிக்குச் சென்றவர்கள் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை அவதானித்து உறிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் பொலிஸார், மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் ஆகியோர் குறித்த வயல் பகுதிக்குச் சென்று உயிரிழந்த யானையை பார்வையிட்டனர்.
நீண்ட காலமாக இப் பகுதியில் யானை தொடர்ச்சியாக நெற்பயிரை சேதப் படுத்தி வந்ததாகவும் தெரிய வருகிறது.
மீட்கப்பட்ட யானை எவ்வாறு உயிரிழந்தது என்பது குறித்து வன ஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் சடல சோதனைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த விவசாய காணியின் உரிமையாளரை மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.ஆர்.லெம்பேட்


44 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago