2025 ஜூலை 21, திங்கட்கிழமை

’எழுத்து மற்றும் ஆய்வு சார் ஆளுமைக்கான’ விருது

Freelancer   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். றொசேரியன் லெம்பேட் 

அமெரிக்காவில் உள்ள  கலிபோனியா பெரு நகரை தளமாகக் கொண்டு இயங்கும்  SCSDO  என அழைக்கப்படும் 'அறிவியல் மற்றும் சமூக மேம்பாட்டு  நிறுவனம்' ஞாயிற்றுக்கிழமை (19) வவுனியாவில் நடத்திய நிகழ்வின் போது, மன்னார் மடுமாதா சிறிய குருமட இயக்குநர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் துறைசார் ஆளுமைக்கான விருதைப் பெற்றுக்கொண்டதுடன் முடி சூட்டியும் கௌரவிக்கப்பட்டார்.  

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த   47 துறைசார் ஆளுமைகளுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்ட இந்நிகழ்வுக்கு பேராசிரியர் கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி முதன்மை விருந்தினராகவும் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர், வவுனியா அரசாங்க அதிபர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X