2025 மே 14, புதன்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Janu   / 2023 ஒக்டோபர் 01 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் - முருங்கன் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை  கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக  மன்னார் முருங்கன் பகுதியில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு ஐஸ் போதைப்பொருள் சுற்றிவளைப்பு வெற்றிகரமாக  முறியடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட  சுற்றிவளைப்பின் போது 25 இலட்சம் ரூபா பெறுமதியான 178.75 கிராம் நிறை கொண்ட ஐஸ் போதைப்பொருளுடன் முருங்கன் பிட்டி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லம்பர்ட் றொஸரியன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .