2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் குடும்பப்பெண் கைது

R.Tharaniya   / 2025 ஜூலை 01 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம்
கொழுந்துபிலவு பகுதியில்   வீடொன்றின்  பின்புறம் மறைத்து
வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் 79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரள
கஞ்சாவையும் சந்தேகத்தின் பேரில்  வீட்டு உரிமையாளரான 55 வயதுடைய
பெண் ஒருவரையும் திங்கட் கிழமை (30) அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட  கஞ்சாவும் கிளிநொச்சி மாவட்ட நீதவான்
நீதி மன்றில் முன்னிலைப்படுத்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  D.M.S.J . திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மு.தமிழ்ச்செல்வன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .