Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 07 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சன்முகம் தவசீலன்
புதுமாத்தளன் கடற்கரையில் கஞ்சா பொதிளை கைப்பற்றிய முல்லைத்தீவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுமாத்தளன் கடற்கரையில் பொதிகள் காணப்படுவதாக செவ்வாய்க்கிழமை (07) இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, கடற்கரைக்கு சென்ற இராணுவத்தினர் கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக இராணுவத்தினரால் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார், குறித்த கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடந்த தலா 22 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.
இதுவரை 11 கஞ்சா பொதிகள் கைப்பற்றிய நிலையில், கடற்கரை பகுதி முழுவதும் மேலும் பொதிகள் ஒதுங்கியுள்ளதா என்று சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், மீனவர்களிடம் விசாரணை முன்னெடுத்து வருகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், விசாரணைகளின் பின்னர் கஞ்சா பொதிகளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago