2024 ஜூலை 27, சனிக்கிழமை

கொல்களம் முற்றுகை

Janu   / 2024 ஜூன் 11 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை - துன்னாலைப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட சாவகச்சேரிப் பொலிஸார் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை செவ்வாய்க்கிழமை (11)  காலை மீட்டுள்ளனர்.

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் அண்மையில் வளர்ப்பு மாடுகள் திருடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீண்ட தேடுதலுக்கு மத்தியில் பொலிஸார் மேற்படி சட்டவிரோத கொல்களத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது சாவகச்சேரி- மட்டுவில் கிராமத்தில் திருடப்பட்ட ஒரு மாட்டினை பொலிஸார் மீட்டதுடன்-ஏனைய இரண்டு மாடுகள் அடையாளம் காணப்படாத நிலையில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் வைத்து பராமராக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளையில் மட்டுவில் கிராமத்தில் திருடப்பட்ட ஏனைய மாடுகள் இறைச்சியாக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சுற்றிவளைப்பின் போது மாடுகளை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றுடன் பிரதான சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

 பு. கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .