2025 மே 12, திங்கட்கிழமை

கிராம அலுவலர் உள்ளிட்ட இருவர் கைது

Janu   / 2024 ஜனவரி 16 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அலுவலர் ஒருவர் உட்பட இருவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருட்களை விறபனை செய்த  குற்றச்சாட்டில் பொலிஸாரால் திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்  தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினர்களுக்கும் போதைப்பொருட்களை வியாபாரம் செய்து வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர் ஹெரோயின், ஐஸ்  உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும்  குறித்த போதைப்பொருட்களை பல இளைஞர்கள் ஊடாக பல்வேறு தரப்பினருக்கும் விற்பனை செய்துவருவதாகவும் அப்பிரதேச மக்களால் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸாரால் பல நாட்களாக தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்த நிலையில், திங்கட்கிழமை (15) குறித்த கிராம அலுவலர் மற்றும் அவருடன் இணைந்து குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்திய போது அவர்கள் போதைக்கு  அடிமையாகியிருந்தமை தெரியவந்துள்ளதுடன் குறித்த இருவரை  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சண்முகம் தவசீலன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X