2025 மே 14, புதன்கிழமை

கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

Freelancer   / 2023 ஒக்டோபர் 29 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன் , எம்.றொசாந்த் 

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் 140 கிலோ கிராம் எடையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை (29)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை வீதியூடாக வாகனத்தில் கஞ்சாவினை எடுத்துச் செல்லும் போது கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் மாதகல் பகுதியையும் மற்றைய நபர் யாழ்ப்பாண பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது,.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு குறித்த இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X