Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஓகஸ்ட் 08 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதேச சபையின் அனுமதியின்றி வடமராட்சி பகுதியில் முறைகேடாக கட்டப்பட்டு வந்த மதில்கள் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாரின் பிரசன்னத்துடன் ஜேசிபி இயந்திரம் மூலம் புதன்கிழமை (07) இடித்து அகற்றப்பட்டன.
யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை (கரவெட்டி பிரதேச சபை) எல்லைக்குட்பட்ட நெல்லியடி நகரம், கரணவாய் வடக்கு ஆகிய பிரதேசங்களில் இருவேறு காணி உரிமையாளர்கள் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி தொடர்ந்து கட்டப்பட்டு வந்த மதில்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன .
கரணவாய் வடக்கு நவிண்டில் பிரதேசத்தில் உள்ள மதிலொன்றும் நெல்லியடி நகர பேருந்து தரிப்பிடத்தின் பின்னால் உள்ள வீடொன்றின் மதிலும் இவ்வாறு இடித்து அகற்றப்பட்டன.
சமீப காலமாக அனுமதி பெறாத கட்டிடங்கள், மதில்கள் கட்டப்பட்டு வருகின்றமை அதிகரித்து வருவதாகவும், இதனால் இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் பிரதேச சபையிடம் முறையிட்டு வந்தனர்.
இது தொடர்பில் பிரதேச சபையினரால் கடந்த ஒரு வருடமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக அறிவுறுத்தல்கள் மற்றும் பல்வேறு கடிதங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையிலும் அவற்றை மீறித் தொடர்ந்து முறைகேடான விதத்தில் மக்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது வீதிகளை ஆக்கிரமிக்கும் வண்ணமும் குறித்த மதில்கள் கட்டப்பட்ட காரணத்தினால் இவை இடித்து அகற்றப்பட்டதாக பிரதேச சபைத் தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதர்ஷன் வினோத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago