2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சந்திரகுமாரும் , சிவஞானமும் கிளிநொச்சியில் சந்திப்பு

Editorial   / 2025 டிசெம்பர் 21 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி கே. சிவஞானமும்   ஜனநாயகதமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமாரும் கிளிநொச்சி சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச் சந்திப்பு  கிளிநொச்சியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது.

அரசியல் நிலைமைகள், எதிர்கால செயற்பாடுகள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள
பயங்கரவாத தடைச் சட்டம்  தொடர்பில் தமிழ் மக்களின் தரப்பாக எவ்வாறு
செயல்படுவது போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடினார்கள்.

இச் சந்திப்பில் சமத்துவக் கட்சியின் தலைவர் சு. மனோகரன், கட்சியின்
செயற்பாட்டாளர் முன்னாள் போராளி பாலன் மாஸ்டர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X