Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஜூலை 23 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு ஜூலை தினத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை யாழில் முன்னெடுத்தனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமராக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ். மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். பிரதான வீதியிலுள்ள கலைத்தூது மண்டபத்திற்கு முன்பாக, செவ்வாய்க்கிழமை (23) மதியம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டு தரக் கோரி வடக்கு கிழக்கிலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் மேற்படி சங்கத்தினர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் இப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (23) முன்னெடுக்கப்பட்டது.
“உறவுகள் எங்கே”, “நீதி வேண்டும்”, “சர்வதேசமே கண்ணை திறந்து பார்”, “உறவுகள் நீதி கோருகிற போது அரசாங்கமே நிதியை வழங்கி ஏமாற்றாதே”, “எங்கள் உறவுகளுக்கு பதில் கூறு” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோஷங்களை ஏழுப்பினர்.
மேலும், கறுப்பு ஜூலை தினமான, ஜூலை 23ஆம் திகதியன்று கறுப்பு ஜூலைக் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் நீதி வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் யாழ்.மாவட்ட சங்கத்திற்கான புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றிருந்தது. முன்னர் இருந்த சங்க தலைவி பூங்கோதை தலைமையிலான நிர்வாகமே மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.நிதர்ஷன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago