Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஏப்ரல் 21 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாணத்தில் சுகாதார துறையில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அதற்கு அதிகாரிகளின் நேர்மையான செயற்பாடுகள் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் சுகாதார துறைசார்ந்த உயர் அதிகாரிகளுக்கும், ஆளுநருக்கும் இடையில் , ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் .
இதன்போது , சுகாதார சேவையை முன்னெடுப்பதில், மாவட்ட ரீதியில் காணப்படும் இடர்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளால் ஆளுநருக்கு எடுத்துக்கூறப்பட்டது. சில பகுதிகளில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகவும், பௌதீக வளப் பற்றாக்குறை பாரிய சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
நோயாளர்களின் உரிமைகளை பாதுகாத்து கரிசனையுடன் செயற்பட வேண்டிய பொறுப்பு சுகாதார அதிகாரிகளிடம் காணப்படுவதாகவும், கொள்கைகளை பின்பற்றி அதிகாரிகள் செயற்பட வேண்டும் எனவும் ,மத்திய அரசாங்கதிடமிருந்து ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாகவும் ஆளுநர் இதன்போது கூறியுள்ளார் .
மேலும் தரமான சிறந்த சுகாதார சேவையை உறுதி செய்து, அதனை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கு அரச அதிகாரிகள் அர்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
எஸ் தில்லைநாதன்
21 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
2 hours ago