2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

“ஜனாதிபதி, மீனவரின் பிரச்சனை தொடர்பில் பேச வேண்டும்”

Janu   / 2024 செப்டெம்பர் 25 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா செல்ல உள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியா எல்லை தாண்டிய மீனவர்கள் தொடர்பில் பேச வேண்டும் என யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கோரிக்கை முன்வைத்துள்ளார் .

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்...

இந்தியா எல்லை தாண்டிய மீனவர்கள் வருகையால் வட பகுதி மீனவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்

கடந்த அரசாங்கத்தில் மீனவ சமூகம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க இந்தியா மீனவர்களின் அத்துமீறல் ஓரளவேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் புதிய ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்றுள்ள நிலையில் எமது மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இந்தியா பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி நிரந்தர தீர்வு பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

அத்தோடு வட மாகாணத்தில் இடம்பெறும் உள்ளூர் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதோடு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

ஆகவே எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்என தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X