2025 மே 14, புதன்கிழமை

தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் மீட்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 24 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

முல்லைதீவு - வவுனிக்குளதில் கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினர் செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை மேற்கொண்ட திடீர் பரிசோதனையின்போது சுமார் 15 இலட்சம்  பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் குமாரகுலசிங்கம் சங்கீதன் கூறியதாவது,

இவ்வாறான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி தொழில் செய்வதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு மட்டுமன்றி நன்னீர் மீன் வளங்கள் உட்பட நீர் நிலைகளின் சூழலும் பாதிப்படைகின்றன.

எனவே மீனவர்கள் பெருமளவு தொகை நிதியினை செலவு செய்து தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தித் தொழல் நடவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன்,   கைப்பற்ற வலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X