2025 மே 17, சனிக்கிழமை

தப்பியோடிய கைதி மண்டபம் அகதி முகாமில் தஞ்சம்

Freelancer   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். றொசேரியன் லெம்பேட்

மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக, வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு, மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கைவிலங்குடன் தப்பிய இரண்டு கைதிகளில் ஒருவர், நேற்று (21) காலை  மண்டபம் அகதி முகாமில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

மன்னார்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, வவுனியா சிறைச்சாலையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பியோடிய மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான செல்வராஜ் சிந்துஜன், கடல் மார்க்கமாக மண்டபம் அகதி முகாமில் தஞ்சமடைந்து உள்ளதாக தெரியவருகிறது. 

சிந்துஜன் தந்தை செல்வராஜ், ஞாயிற்றுக்கிழமை (19) இ ராமேஸ்வரம் நகர் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (21) காலை சிந்துஜன் மண்டபம் அகதி முகாமில்  தஞ்சம் அடைந்துள்ளதால், உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் குறித்த நபர் மண்டபம் அகதி முகாமில் உள்ளமை தெரிய வருகிறது.

குறித்த நபர், தலைமன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது. தப்பிய மற்றைய கைதியை பொலிஸார் தேடி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .