2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தமிழர் தாயக கட்சி ரணிலுக்கு ஆதரவு

Janu   / 2024 செப்டெம்பர் 18 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் தாயக கட்சி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாக புதன்கிழமை (18) தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கட்சியின் தலைவர்  த. இதயலால் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த ஒருவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்கிற ஒரு நிலைப்பாட்டில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளோம். எவரும் நாடு பாதாளத்தில் இருக்கின்ற போது பொறுப்பேற்காத போது தத்துணிவோடு செயல்பட்ட அவரை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற நோக்கோடு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் முல்லைத்தீவு இளைஞர் அணி தலைவர் மு. முகுந்தகஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

க. அகரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X