Freelancer / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
தமிழ் எம்பிக்கள் மீது அழுகிய தக்காளி பழங்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமை தினமான நேற்று முன்தினம் வவுனியா, பிரதான தபாலகத்துக்கு முன்பாக 2120 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தமிழ் எம்.பிக்கள் இலங்கை அரசுடன் பேச வேண்டாம்; தமிழ் எம்.பிக்கள் இலங்கை அரசுடன் தனியாகப் பேச வேண்டாம் என்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாகைகளையும் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமிழ் எம்.பிக்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாகைக்கு அழுகிய தங்காளி பழங்களை எறிந்து, மத்தியஸ்தம் இல்லாமல் பேச்சுக்கு செல்லக்கூடாது எனத் தெரிவித்து, தமது எதிர்பைத் தெரிவித்தனர்.

4 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
09 May 2026
09 May 2026