2025 மே 14, புதன்கிழமை

திடீர் விபத்து தொடர்பான விழிப்புணர்வு

Freelancer   / 2023 நவம்பர் 01 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி வைத்தியசாலையில் திடீர் விபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (31) செயன்முறை ரீதியாக  நடைமுறைப்படுத்தப்பட்டது.

வைத்தியசாலைகள் எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருப்பதன் அவசியத்தை எடுத்துக்கூறும் முகமாக குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இரணைமடு சந்தியிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைவரை நோயாளர்கள் பல வாகனங்களில் வைத்தியசாலைக்கு கொண்டுவருவது போல சித்திகரிக்கப்பட்டு திடீர் விபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு செயன்முறையாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராணுவத்தினர், பொலிஸார், கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினர், வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.  M

யது பாஸ்கரன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X