2025 மே 09, வெள்ளிக்கிழமை

திருடப்பட்ட குளியல் அறை பொருட்களுடன் இருவர் கைது

Janu   / 2023 செப்டெம்பர் 06 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து திருடப்பட்ட ஒரு தொகுதி குளியல் அறை உபகரணங்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (5) மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து  சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான குளியல் அறை உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 58 வயதுடையவர்கள் என மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் உரிமையாலரின் முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் பொலிஸார்  மேற்கொண்ட துரித நடவடிக்கைகளுக்கு அமைவாக செவ்வாய்க்கிழமை (5) குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எஸ்.றொசேரியன் லெம்பேட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X