2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தீர்த்தத்தில் ஒருவர் மரணம் மற்றுமொருவர் மாயம்

Janu   / 2024 செப்டெம்பர் 18 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத்தீர்த்த திருவிழாவின் போது ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் , மற்றுமொருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். 

வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியை சேர்ந்த கந்தசாமி வினோகரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளதுடன் நுணாவில் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

 சமுத்திர தீர்த்த திருவிழா செவ்வாய்க்கிழமை (17) மாலை இடம்பெற்றதுடன் இதன் போது பெருமளவானோர் கடலில் நீராடியுள்ளனர் .  அவ்வேளை ஒருவர் கடலில் மூழ்கிய நிலையில் அவரை அருகில் நின்றவர்கள் காப்பாற்றி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

அதேவேளை நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போனவரை செவ்வாய்க்கிழமை (17)  இரவு வரையில் கடலில் தேடிய நிலையிலும் அவர் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X