Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஒக்டோபர் 28 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சனிக்கிழமை (26) அன்று நீர்வேலிப் பகுதியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடங்கிய கும்பல் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து சென்று , மீண்டும் சுமார் 30 பேருடன் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
அதில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்கானவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்படும் தரப்பினரும் பரஸ்பர முறைப்பாட்டினை பொலிஸ் நிலையத்தில் வழங்கியிருந்தனர்.
அதனையடுத்து பொலிஸார் , தாக்குதலுக்கு இலக்காகி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்களுக்கு வைத்தியசாலையில் கட்டிலுடன் கைவிலங்கிட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான மூவர் மற்றும் தாக்குதலை மேற்கொண்ட ஐவர் என 08 பேரையும் யாழ் . நீதவான் நீதிமன்றில், திங்கட்கிழமை முற்படுத்தினர்.
இதன்போது அவர்களை பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
எம் . றொசாந்த்
33 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago