2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நம்பிக்கையிலா பிரேரணைக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆதரவு

Janu   / 2024 மார்ச் 14 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபா நாயகருக்கு எதிராக நம்பிக்கையிலா பிரேரணை நாளை நாடாளுமன்றில் பிரேரிக்கப்பட உள்ள நிலையில்  தமிழ்தேசிய மக்கள் முன்னணி அதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு நட்டாங்கண்டல் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையின் அதிபர் தலைமையில்   99 வது இல்ல மெய்வல்லுனர் போட்டி புதன்கிழமை  (13) பிற்பகல் இடம்பெற்றிருந்தது 

 இதில்  சிறப்பு விருந்தினராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கலந்துகொண்டுள்ளதுடன்  அதன்போது சபா நாயகருக்கு எதிராக நம்பிக்கையிலா பிரேரணை  தொடர்பில்  கருத்து தெரிவிக்கையில் ,   

" சபா நாயகருக்கு எதிராக நம்பிக்கையிலா பிரேரணை ஒன்று  எதிர்கட்சியினால் தயாரிக்கப்பட்டுள்ளது 

அந்த  பிரேரணையில்   கையொப்பம் இடுவதற்கான கோரிக்கை  எமக்கு இதுவரை  விடுக்கப்பட்வில்லை , நாளைய தினம்  நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்றது

அந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் கூட அதற்கு ஆதரவாக நிச்சயம் நாங்கள் வாக்களிப்போம் எங்களிடம் அதற்குரிய ஆதரவை  அவர்கள்   கொரியிருக்கா  விட்டாலும் , எங்களை  பொறுத்த வரைக்கும் , சபா நாயகருக்கெதிரான அந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நாம் நிச்சயம் ஆதரிப்போம் ஏனென்று சொன்னால் அவருடைய நடுநிலையற்ற செயரற்ப்பாடுடைய போக்குகள், பல சந்தர்ப்பங்களில் அவற்றினை நாங்கள் அவதாநித்திருக்கின்றோம், நேரடியாக நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்

எங்களின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கொழும்பிலே  கைது செய்யப்படுகின்ற சந்தர்ப்பத்திலே, வேண்டுமென்றே அவரை கைது செய்வதற்கான சூழலை உருவாக்கியிருந்தார்

ஒரு இனாவாத அடிப்படையிலே தான் அவரின் செயற்பாடு காணப்பட்டிருந்தது அவர் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல இன்று ராஜபக்ச அரசினுடைய காவலனாகவும், ரணில் விக்கிரமசிங்கவினுடைய காவலனாகவும் அவர் இருக்கின்றாரே தவிர அரசினுடைய அல்லது நாடாளுமன்றத்தினுடைய மக்களின் காவலனாக அவர் தன்னுடைய கடமையை செய்ய தவறுகின்றார்,ஆகவே இந்த் தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும் "  என அவர் குறிப்பிட்டுள்ளார் .

சண்முகம் தவசீலன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X