2025 மே 14, புதன்கிழமை

பல நாள் திருடன் அகப்பட்டான்

Freelancer   / 2023 நவம்பர் 01 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

ஆலய வழிபாட்டுக்கு செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 10 தங்கப் பவுண் நகைகள், கைப்பைகள், அலைபேசிகள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் விரத வழிபாட்டுக்கு ஆலயம் செல்லும் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறியில் ஈடுபட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X