2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பாடசாலைக்கு நூலகக் கட்டடம் வேண்டும்

Freelancer   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி,வேரவில் இந்து மகா வித்தியாலயத்தில் நூலகத்துக்கான கட்டடம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. கிளிநொச்சி மேற்கில் உள்ள முக்கியமான இப்பாடசாலையில் 268 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.  ஆண்டு 01 தொடக்கம் ஆண்டு 13 வரையான வகுப்புகள் உள்ளன.  

இப்பாடசாலையில் ஆரம்பப் பிரிவு, நாடகமும் அரங்கியலும், சைவ சமயம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. மேலும், இந்த மகா வித்தியாலத்துக்கு நூலகக் கட்டடத்தை உருவாக்கி, ஆசிரியர் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்யுமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில் ஆகிய பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்கு பஸ்  சேவைகளும் இடம்பெற வேண்டும் எனவும்  பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X