Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மார்ச் 09 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவையும், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையையும் இணைக்கும் கொக்கிளாய் பாலத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களிடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றில் (07)வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற 2025ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சரிடம் இக்கோரிக்கையினை முன்வைத்ததுடன், அத்தோடு தனது கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக ஆயிரம் மில்லியனை ஒதுக்கியமைக்கு 2025ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தில் வட்டுவாகல் பாலத்தினை அமைப்பதற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கு தனது நன்றியையும் தெரிவித்திருந்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,உங்களுடைய பாரபட்சமின்மை எல்லோரையும் அணைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்திற்கு, பாராட்டு கின்றேன். வாழ்த்துகின்றேன். நிதிஒதுக்கீடுகள் பூரண திருப்தி, முள்ளிவாய்க்கால் கிழக்குகிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் நிறைவேற்றி விட்டீர்கள். ஜனாதிபதி அவர்களுக்கும், உங்களுக்கும் மனம் நிறைவான நன்றிகள்.
இந்தப்பாலத்தின் கட்டுமானப்பணிகளை துரிதமாக முன்னெடுக்கவும், இந்த வருடத்துக்குள் இதற்காக ஒதுக்கப்பட்ட பணத்துக்கான வேலைத்திட்டங்கள் பூரணப்படுத்தவும் உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை.
அடுத்து இப்போது ஒருமுக்கியமான கோரிக்கையை உங்களிடம் கொண்டுவருகின்றேன். அடுத்த வரவுசெலவுத்திட்டத்திலோ அல்லது, அதற்குமுன் பொருத்தமாக நிதிகிடைக்கும் பட்சத்திலோ இத்திட்டத்துக்குமுன்னுரிமை தாருங்கள்.முல்லைத்தீவு - கொக்கிளாயிலிருந்து, திருகோணமலை - புல்மோட்டைவரையிலான இரண்டுமாவட்ட மக்களினதும் கனவை நிறைவேற்றுங்கள்.அதிகமான சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். இந்தப்பாலம் கொக்கிளாய் நீரேரியினூடாக அமைப்பதால் மிகவும் குறுகிய நேரத்தில் பயணிகள் பிரயாணம்செய்வதற்கு உதவமுடியும்.
நாட்டின் முன்னேற்றத்திற்கானவகையில், ஆலோசனை வழங்குவதில் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எமக்கும் பொறுப்பு உண்டு. இந்தப்பாலம் அமைப்பதால் இரண்டு மாவட்ட மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமைவதோடு, சுற்றுலாப்பயணிகள் பெருமளவில் இந்தப்பகுதிகளுக்கு வருவது நாட்டின் வருவாய்க்கும் உதவும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை என்றார்.
விஜயரத்தினம் சரவணன்
7 minute ago
20 minute ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
23 Aug 2025