Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 நவம்பர் 28 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம், யாழ்ப்பாணம் கைதடியில் இடம்பெற்றுள்ளது.
கைதடி ஏ-9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்த கொள்ளைச் சம்பவம் புதன்கிழமை (27) முற்பகலில் இடம்பெற்றுள்ளது.
பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்தபோது இரண்டு கொள்ளையர்கள் பூசகர் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியையும் 45 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையருக்கு உதவிய பெண்ணொருவர் இதன் போது பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபரை சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை தப்பிச் சென்ற இரு கொள்ளையர்களையும் கைது செய்யும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
24 minute ago
29 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
29 minute ago
45 minute ago