2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போதைக் கலாசாரம் குறித்த கலந்துரையாடல்

Freelancer   / 2022 டிசெம்பர் 09 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

சமூக நெருக்கடியும் போதை கலாசாரமும் எனும் கலந்துரையாடல்,  கொக்குவில், தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது. 
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி, போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளமை தொடர்பான விடயங்கள் தொடர்பில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி. யமுனா நந்தா தெளிவுபடுத்தினார்.

போதைப்பொருளுக்கு உட்பட்ட மாணவர்கள், சிறுவர்கள் தொடர்பில் அருட்தந்தை கலாநிதி வின்சன்ற் பற்றிக் அடிகளார் கருத்துகளை முன்வைத்தார். குறித்த கலந்துரையாடலில் மல்லாக நீதிமன்றத்தின் உதவி நீதிபதி தேவராஜ், உள்ளிட்ட புத்திஜீவிகள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X