Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஒக்டோபர் 13 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருளை வைத்திருப்பதாக, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் - இணுவில் வீதி, மானிப்பாய் பகுதியில் பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மேற்கொண்ட விசாரணையில் தான் போதை குளிசை பாவிப்பதாகவும், தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் , குறித்த நபருடைய கடையின் பின் பகுதியில் பல போதை குளிசைகளும், வெற்று கவர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்தபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago