Janu / 2024 ஒக்டோபர் 02 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் திங்கட்கிழமை (02) காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் இந்திய துணைத்தூதர் சாய் முரளி , வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி,யாழ் மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன், யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருள் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் துவிச்சக்கர வண்டி பவனியொன்றும் மேற்கொள்ளப்பட்டதுடன் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் மரநடுகையும் இடம்பெற்றது.
நிதர்ஷன் வினோத்
12 minute ago
23 minute ago
30 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
30 minute ago
49 minute ago