2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மாட்டு இறைச்சியுடன் மூவர் கைது

Janu   / 2026 பெப்ரவரி 03 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு ,புதுக்குடியிருப்பு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  மக்கள் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படுகின்ற கால்நடைகள் களவாடப்பட்டு  இறைச்சிக்காக விற்பனையாகின்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது

அந்த வகையில் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து திங்கட்கிழமை (02)அன்று களவாடப்பட்டு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இருக்கின்ற குப்பை கொட்டுகின்ற பகுதியிலே  களவாடப்பட்ட மாடு ஒன்று இறைச்சியாக்கப்பட்டு வெகனார்  வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையில் வாகனத்துடன் மூவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்

சந்தேக நபர்களை செவ்வாய்க்கிழமை (03) அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது  பொலிஸ் நிலைய அதிகாரி தி.ஜனன் கு‌றி‌த்த பகுதியில் மேலும் நான்கு மாடுகளின் மண்டை ஓடுகள்  காணப்பட்டதாகவும் இவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில்   மூவரையும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்   உத்தரவிட்டுள்ளார் 

சண்முகம் தவசீலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X