2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மருமகனுடன் சென்றவர் உயிரிழப்பு

Janu   / 2023 ஒக்டோபர் 12 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியசாலைக்குத் தனது  மருமகனுடன் சைக்கிளில் சென்ற ஒருவர்  சைக்கிளிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.வெளிச்சவீடு வீதி, பருத்தித்துறையை சேர்ந்த 52 வயதுடைய பிலிப்பு இராஜசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 7ஆம் திகதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக மந்திகை வைத்தியசாலைக்கு மருமகனுடன் சைக்கிளில் செல்லும்போது இடைவழியில் கீழே விழுந்துள்ளார்.

இதன்போது அவரை முச்சக்கரவண்டி மூலம் மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (10) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான பிரேதப் பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.

பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X