2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மாணவர்களுக்கு புத்தங்களை கையளிப்பு

Janu   / 2023 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த வறுமைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் சேமிப்பினை ஊக்கிவிக்கும் நோக்கில் மாதாந்தம் 500 ரூபா வைபிலிடும் திட்டத்தில் வி.பி.பவுண்டேசன் அமைப்பினால் மூன்றாம் கட்டமாக முன்னெடுக்கப்படும் திட்டத்தில் 85 மாணவர்களுக்கு இலங்கை வங்கியில் வைப்பிலிடப்பட்ட வங்கி புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (23) விசுவமடு பொது நூலகத்தில் வி.பி.பவுண்டேசன் அமைப்பின் இணைப்பாளர் கரிகாலன் தலமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது 85 மாணவர்களுக்கு 18அகவை வரை மாதம் தோறும் 500 ரூபா வி.பி.பவுண்டேசன் அமைப்பினால் வைப்பில்இடப்படுவதுடன் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் சேமிப்பினை ஊக்கிவிக்கும் நோக்கில் பணம் வைப்பிலிடப்பட்ட வங்கி புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்களுக்கான ஆரம்பகல்வி வழிகாட்டி புத்தகம்,மற்றும் இலங்கை வங்கியின் சேமிப்பு உண்டியல் என்பன இதன்போது வழங்கிவைக்கப் பட்டுள்ளது.

செ.கீதாஞ்சன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X