Editorial / 2024 செப்டெம்பர் 06 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் .றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்தவர்களுடன் குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிலும் திரைப்பட திரையிடல்கள் நடைபெறுகின்றன.
திரைப்படங்களை பார்வையிட வந்தவர்களுடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் நான்கு மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த வருடம் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் , கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற திரையிடலை பார்வையிட காற்சட்டை களுடன் வந்தவர்களை பல்கலை கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பல்கலை கழகத்தினுள் நுழைய அனுமதி மறுத்திருந்தனர்.
ஆனால் திரைப்படத்தை பார்வையிட வந்தவர்கள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு , அவற்றை காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தமையால் , அவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
12 Mar 2026
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Mar 2026
12 Mar 2026