Janu / 2024 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 26 ஆம் திகதி விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற, டெல்வின் ராஜ், வெள்ளைச்சாமி, சுரேஷ், எமரிட் ஆகிய நால்வரும் மீன் பிடித்து விட்டு செவ்வாய்க்கிழமை (27) அன்று கரை திரும்பிய போது சூறைக்காற்று காரணமாக நடுக்கடலில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானது.
மூழ்கிய படகில் இருந்த இரண்டு மீனவர்கள் நீந்தி இலங்கை கடற்படையினரின் உதவியால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர் .
இந்நிலையில் காணாமல் போன எமரிட் மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய இருவரை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதியோடு சக மீனவர்கள் இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில் புதன்கிழமை (29) மாலை எமரிட் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மீனவரை தேடும் பணி மேற்கொள்ளுமாறு அவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
மேலும் , விபத்து குறித்து மரைன் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
எஸ்.ஆர்.லெம்பேட்


2 hours ago
12 Mar 2026
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Mar 2026
12 Mar 2026