Editorial / 2025 நவம்பர் 21 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
யாழ்ப்பாணம் வடமராட்சி சுப்பர்மடம் பகுதியில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு குருதிக்கொடை அளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (21) காலை 9:00 மணியளவில் சுப்பர் மடம் பொது மண்டபத்தில் இடம் பெற்றது. குருதியினை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை குருதி வங்கி பிரிவினர் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை (21) அன்று மாவீரர் நினைவேந்தல் கொட்டகை அமைக்கப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம் பெற்றது. இதில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றன.
இதில் பருத்தித்துறை நகரசபை சபை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல், மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.



2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago