2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் நடமாடும் சேவை

Freelancer   / 2024 நவம்பர் 04 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,  முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மு. ப 10.00 தொடக்கம் - பி. ப 4.00 வரை பொதுமக்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08 ) சந்திக்க உள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய தீர்வுகளை விரைவாக வழங்கும் நோக்கத்தில் நடமாடும் சேவையினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் அதிகளவான பொதுமக்கள் பங்குபற்றி பயன்பெற்றனர்.

இதேபோல் மன்னார், வவுனியா,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடமாடும் சேவை இடம்பெற உள்ள திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X