Editorial / 2024 செப்டெம்பர் 10 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
கிணற்றில் குளிக்க சென்ற குடும்பஸ்தர் , கிணற்றடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியை சேர்ந்த செல்வராசா கார்த்தீபன் (வயது 35) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது தோட்டத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை(9) அதிகாலை வேலை செய்த பின்னர் , காலை வீட்டுக்கு வந்து குளிக்க செல்வதாக கூறி கிணற்றடிக்கு சென்றுள்ளார்.
குளிக்க சென்றவரை நீண்ட நேரமாகியும் காணாததால் அவரை அவரது மனைவி தேடி சென்ற போது , கிணற்றடியில் மூர்ச்சையற்று காணப்பட்டுள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
2 hours ago
12 Mar 2026
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Mar 2026
12 Mar 2026