Janu / 2024 செப்டெம்பர் 01 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவில் காட்சி படுத்தப்பட்டிருந்த ரணில் மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பதாதைகள் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று அகற்றப்பட்டுள்ளது .
வவுனியாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.
இந் நிலையில் வவுனியா நகரப்பகுதிகளில் ரணில் மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் ஆகியோரது உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்துள்ளது .
குறித்த பதாதைகள் ஜனாதிபதி ரணில் வருகை தருவதற்கு முன்பு பொலிஸாரால் அகற்றப்பட்டதாகவும் இச் சம்பவத்தை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவரை அழைத்தபொலிஸார் அவர்களின் விவரங்களை பதிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
க. அகரன்


12 Mar 2026
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Mar 2026
12 Mar 2026