2026 மார்ச் 18, புதன்கிழமை

வெளிநாட்டு கஞ்சா மீட்பு

Janu   / 2026 மார்ச் 17 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, சாத்தான் தீவு (Devils Point) கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 78 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வட மத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட 'புவனேக' கடற்படை கப்பல் பிரிவினர் மற்றும் விரைவு நடவடிக்கை படையினர் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை (13) அன்று இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது, கடல் பகுதியில் மிதந்து வந்த 8 சந்தேகத்திற்கிடமான பார்சல்களை சோதனையிட்டதில், அவற்றில் 78 கிலோ 300 கிராம் எடையுள்ள வெளிநாட்டு கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

கடற்படையினரின் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடத்தல்காரர்கள் இந்தக் கஞ்சா பொதிகளை தரையிறக்க முடியாமல் கடலில் வீசி  சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளின் மொத்த பெறுமதி 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருள் கையிருப்பு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி, ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  கடற்படையினர் தெரிவித்தனர்.

எம். எச். எம். சியாஜ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X