2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை

விளையாடிக்கொண்டிருந்த இளைஞன் மீது தாக்குதல்

Janu   / 2025 பெப்ரவரி 04 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து இளைஞர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் செவ்வாய்க்கிழமை (04)  தெரிவித்தனர்.

வவுனியா, தவசிகுளம் பகுதியில் இரண்டு அணிகளுக்கிடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது குறித்த மைதானத்திற்குள் வந்த சிலர் விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், விளையாட்டு நிகழ்வில்  வழங்கப்படவிருந்த வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் கதிரைகளையும் உடைத்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,  அங்கு பெறப்பட்ட முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

க. அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X