2025 மே 14, புதன்கிழமை

140 கி வலைகளுடன் சந்தேகநபர் கைது

Freelancer   / 2023 ஒக்டோபர் 26 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட  தீடீர் சுற்றிவளைப்பில் 140 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட மீன் பிடிவலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் புதன்கிழமை (25) தீடீர் சுற்றிவளைப்பின்போது இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் அவர்கள் இணைந்து, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை  வீதியிலுள்ள கடை ஒன்றில்  தடை செய்யப்பட்ட 140 கிலோ கிராம் எடையுள்ள வலையுடன்,  கடையின் உரிமையாளர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்றொழில் பரிசோதகர்கள்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X