Editorial / 2025 மார்ச் 06 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

செந்தூர பிரதீபன்
தீர்வை வரி செலுத்தாமல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 150 சிகரெட் பெட்டிகளுடன் ஒருவர் அச்சுவேலி பாரதி வீதி பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.என் கஜான் புத்திக தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது புதுக்குடியிருப்பு பகுதி சேர்ந்த 45 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பேருந்து நிலையத்துக்கு அருகில் இரண்டு சிகரெட் பெட்டிகளுடன் கைது செய்யப்பட்டு இருந்தார். அவரிடம் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணையின் போது 150 சிகரெட் பெட்டிகள் வீட்டில் பதுக்கி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026