2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

240 ஏக்கர் நெற்பயிர் அழிவு

Mithuna   / 2023 டிசெம்பர் 26 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா  கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு வற்றாப்பளையில் 240 ஏக்கர் நெற்பயிர் அழிவடைந்துள்ளது. முத்தையன்கட்டுக்குளம், மதவாளர்சிங்கம்குளம், முறிப்புக்குளம் என்பன நந்திக் கடலில் கலந்ததன் காரணமாக வற்றாப்பளையின் வடக்கு வெளி, அம்மன் கோவில் வெளி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டிருந்த நெற்பயிர்ச் செய்கை பெரும் அழிவுகளை எதிர்கொண்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

நந்திக் கடலினை முழுமையாக நிரம்ப விடாமல் நேரத்துடன் பெருங்கடலுடன் கலக்கும் பகுதியில் வெட்டி விடுவதன் மூலம் வற்றாப்பளை பகுதியில் விவசாயத்தினை பாதுகாக்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கும் நிலையில் அவ்வாறு நேரத்துடன் நந்திக் கடல் வெள்ளத்தினை வேகமாக பெருங்கடலுடன் கலக்க வைக்க முடியாது.

ஏனெனில் நந்திக் கடலின் கடல் உணவுப் பெருக்கம் பாதிக்கப்படும் என கடற்றொழிலாளர்களும் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில் இதற்கான நிரந்தர தீர்வாக வட்டுவாகல் பாலத்தில் இருந்து வட்டுவாகல் பக்கமாக குறைந்தது 600 மீற்றர் துரமாவது நந்திக் கடலில் காணப்படுகின்ற சேற்றினை அகற்ற வேண்டும் என்பதே அனைவரதும் கோரிக்கையாக உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X