Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி ரவைகள் 4500 இன்றையதினம் (27) மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில், காணி உரிமையாளர் மண் அகழ்ந்தெடுக்கும் போது துப்பாக்கி ரவை பெட்டிகள் இருந்ததனை அவதானித்துள்ளார்.
அதனையடுத்து அப்பகுதியில் உள்ள கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து துப்பாக்கி ரவைகளை மீட்டெடுத்துள்ளனர்.
T-56 வகை துப்பாக்கி ரவைகள் அடங்கிய ஆறு பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 4500 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .