Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு புதன்கிழமை (04) கொக்குதொடுவாய் கமநல சேவைகள் நிலையத்தில் வைத்து நிலக்கடலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் கமநல சேவைகள் நிலையத்திற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், கருநாட்டுகேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு ஒரு ஏக்கர் பயிர்செய்கைக்கான தலா 50 கிலோ கிராம் விதை நிலக்கடலை உள்ளீடுகளும் அத்துடன் ஆரம்ப கட்ட நிலபண்படுத்தலுக்காக சிறு தொகை கொடுப்பனவும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிதி பங்களிப்பில் கொக்குதொடுவாய் கமநல சேவை நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர், உத்தியோகத்தர்கள் என பலர் பயனாளிகளுக்கு நிலக்கடலை வழங்கி வைத்தனர்.
சண்முகம் தவசீலன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .