2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

காத்தான்குடியில் கைகுண்டு ஒன்று மீட்பு

Freelancer   / 2022 ஜூன் 04 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கனகராசா சரவணன்)

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள, ஹோட்டல் ஒன்றின் பின்பகுதில் நிலத்தை தோண்டும் போது அதில் இருந்து கைக்குண்டு ஒன்றை இன்று சனிக்கிழமை (04) மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். 

குறித்த ஹோட்டலின் பகுதியின் நிலப்பகுதியில், சம்பவதினமான இன்று காலை நிலத்தை தோண்டி கழிவு நீரை விடுவதற்காக தாங்கி ஒன்றை கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று கண்டுபிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்று கைகுண்டை மீட்டதுடன்,  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .