2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

போதைப்பொருளுக்கு எதிராக கிளந்தெழுந்த மக்கள்

Princiya Dixci   / 2021 ஜூலை 30 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் வியாபாரம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில், பிறைந்துறைச்சேனை, முகைதீன் தைக்கா பள்ளிவாசலில், நேற்று (29)  விசேட கூட்டமொன்று இடம்பெற்றது.

அதில் கலந்துகொண்ட மக்கள் போதைப்பொருள் விற்பனையை இல்லாமல் செய்ய அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை மாத்திரைகள், ஐஸ், கஞ்சா மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களின் தொழில் ஒவ்வொரு நாளும் அபிவிருத்தியடைந்தே செல்கின்றன என்று, அங்கு வந்த மக்கள் தங்களுடைய ஆதங்கங்களை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இவ்வாறு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நபர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அதற்கு பொலிஸாரும் அதிகாரிகளும் மக்களுக்கு ஒத்துழைப்புகளை தாருங்கள் என்றும் பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .