Princiya Dixci / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தொல்பொருள் எனும் பெயரில் காணிகள் சூறையாடப்படுவதைத் தடுக்கும் நோக்குடன், தொல்பொருள் சம்பந்தமான செயற்பாடுகள் அனைத்தும் யுனெஸ்கோ அமைப்பின் ஊடாக சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை, நோர்வே மற்றும் நெதர்லாந்து தூதுவர்களிடம் தான் வலியுறுத்தியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் மற்றும் நெதர்லாந்து தூதுவர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் ஆகியோரை சாணக்கியன் எம்.பி, நேற்று (12) சந்தித்துப் பேசினார்.
மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் காணி அபகரித்தல், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மணல் அகழ்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது ஆராயப்பட்டதுடன், அதற்கான ஆதாரங்களுடன் கூடிய ஆவணமும் தூதுவர்களிடம் கையளிக்கப்பட்டது.
22 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
2 hours ago