Princiya Dixci / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்கள், இன்று (22) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மதியம் ஒன்றுகூடிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள், பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி, அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட விடுமுறை வழங்க வேண்டும்; கடமைக்கு சமூகமளிக்காத இடையூறுகள் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு, அருகிலுள்ள வைத்தியசாலைகள் அல்லது வைத்திய நிலையங்களில் கடமையாற்றுவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் சம்பள அதிகரிப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை இவர்கள் முன்னெடுத்தனர்.
இதன்போது, தமது கோரிக்கை சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை சிற்றூழியர்கள் தாங்கியிருந்தனர்.
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago