R.Maheshwary / 2021 செப்டெம்பர் 08 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடத்திற்குள் 107.5 கிலோமீட்டர் தூரத்துக்கு, யானை தடுப்பு வேலிகள் அமைத்து, யானைகள் கிராமங்களுக்குள் வருவதை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக கிரான், வாகரை மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த வேலிகள் அமைப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிரான் பிரதேசத்தில் 73 கிலோமீட்டர் தூரவேலியும், வாகரை பிரதேசத்தில் 18.5 கிலோமீட்டர் தூர வேலியும், செங்கலடி பிரதேசத்தில் 16 கிலோமீட்டர் தூர வேலியும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மொத்தத்தில் 83 கிலோமீட்டர் தூர வேலைகளுக்கான கேள்வி கோரப்பட்டு, உரிய ஒப்பந்தக்காரர்களிடம் வேலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வருட இறுதிக்குள் அதனை பூர்த்தி செய்யநடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago